கேரள முதலமைச்சராக பதவியேற்றார் பினராயி விஜயன்

0 1514

கேரளாவின் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் ஆரிஃப் முகம்மத் கான் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பினராயி விஜயனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் சார்பில் வீணா ஜார்ஜ், பிந்து,சிஞ்சு ராணி உள்ளிட்ட 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். சிபிஐ க்கு 4 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

21 பேர் அடங்கிய அமைச்சரவை பதவியேற்றபிறகு டுவிட் செய்த பினராயி விஜயன், அனைவரும் சேர்ந்து புதிய கேரளம் உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments