எலான் மஸ்க்கை நம்பி பணத்தை பறிகொடுத்தவர்கள் அரசிடம் கெஞ்சல்

0 8955

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் என நம்பி, மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி கிரிப்டோகரன்சி முதலீடு செய்து ஏமாந்த பலர் தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு அமெரிக்க வர்த்தக கமிஷனிடம் கெஞ்சி வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத த்தில் இருந்து பலர் கிரிப்டோகரன்சி மோகத்தால் 80 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. எலான் மஸ்க் என்று கருதி, பணம் பல மடங்காகும் என்ற ஆசையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் மட்டும் 20 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில் என்பிசி தொலைக்காட்சியில் Saturday Night Live நிகழ்ச்சியை நடத்திய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றி பேசி மக்களிடம் ஆர்வத்தை தூண்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments