அரசாணைகள், அறிவிப்புகள் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1277

னைத்து அரசாணைகள், அறிவிப்புகள் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என விளக்கமளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில், கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளி விவரங்களையும் வெளியிடுவதற்கான ஸ்டாப்கொரோனா என்கிற இணையத்தளத்தில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் மே 12 வரை 14 அரசாணை பிறப்பிக்கப்பட்டும் ஐந்து அரசாணைகளை மட்டுமே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையத்தளங்களில் பதிவேற்றப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments