"வங்கக்கடலில் வருகிற 24-ம் தேதி புயல் உருவாகிறது" - வானிலை மையம் தகவல்

0 7513
"வங்கக்கடலில் வருகிற 24-ம் தேதி புயல் உருவாகிறது" - வானிலை மையம் தகவல்

ங்கக்கடலில் வருகிற 24-ம் தேதி புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனவும், அது மேலும் வலுவடைந்து 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக உருமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 26ஆம் தேதி ஒடிசா - மேற்குவங்கம் இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும், புயல் கரையைக் கடக்கும் போது தீவிரப் புயலாகவோ, அதி தீவிர புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments