வீட்டுக்கு திருட வந்த கொள்ளையனை கொன்று சடலத்தை 15 வருடங்களாக வீட்டிலேயே பதுக்கிய நபர்; வீட்டை சுத்தம் செய்யும்போது தெரியவந்த உண்மைகள்

0 6645
வீட்டுக்கு திருட வந்த கொள்ளையனை கொன்று சடலத்தை 15 வருடங்களாக வீட்டிலேயே பதுக்கிய நபர்; வீட்டை சுத்தம் செய்யும்போது தெரியவந்த உண்மைகள்

ஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, அவனது உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வந்த கொள்ளையனை சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்தார். சடலத்தின் துர்நாற்றத்தை மறைக்க 70க்கு மேற்பட்ட ஏர் ப்ரெஷனர்களை அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவால் கடந்த 2017 ஆம் ஆண்டு புரூஸ் ராபர்ட்டும் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பின் வீட்டை சுத்தம் செய்ய முயன்ற போது, கொள்ளையனின் சடலம் மற்றும் ஏராளமான துப்பாக்கிகளை ராபர்ட் வீட்டில் பதுக்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments