கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் உள்ளன; மக்கள் அச்சப்பட தேவையில்லை -அமைச்சர் சேகர்பாபு பேட்டி

0 7743

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் உள்ளது எனவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்து ஒரு சிலருக்கு சர்க்கரை அளவை மேலும் அதிகரித்து கருப்பு பூஞ்சை ஏற்பட வழிவகுக்கிறது எனவும் தெரிவித்தார்.

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட மயானத்தில் உறவினர்கள் காத்திருப்பதை தவிர்க்க அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி சார்பில் 220 இன்னோவா கார்கள் தற்காலிக ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments