கொச்சி : காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

0 668

கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 29-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் என்ன ஆனார்கள் என தெரியாமல் சக மீனவர்களும், மீனவர்களும் குடும்பத்தினரும் கவலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கடற்படை மற்றும் விமானப்படை மூலம் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கி, மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments