டிஆர்டிஓ கண்டுபிடித்த கொரோனா சிகிச்சை மருந்தான 2-DG..! அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு வரும் என டாக்டர் ரெட்டீஸ் அறிவிப்பு

0 2206

டிஆர்டிஓ கண்டுபிடித்த கொரோனா சிகிச்சை மருந்தான 2-DG அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு வரும் என அதை தயாரிக்கும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக பெரிய அரசு-தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்கும். மருந்தின் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், அனைத்து மக்களும் வாங்கும் வகையில் விலை குறைத்து நிர்ணயிக்கப்படும் எனவும் அறிக்கை ஒன்றில் டாக்டர் ரெட்டிஸ் தெரிவித்துள்ளது.

2-DG மருந்தை சிலர் போலியாக தயாரித்து விற்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டாக்டர் ரெட்டிஸ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments