கேகே ஷைலஜாவுக்கு ஏன் பதவி இல்லை? பினராயி விஜயன் பதில்

0 4479
கேகே ஷைலஜாவுக்கு ஏன் பதவி இல்லை? பினராயி விஜயன் பதில்

கேகே ஷைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என்பது கட்சியின் தீர்மானம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கேகே ஷைலஜாவுக்கு உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க அதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. எனவே ஷைலஜாவை மீண்டும் அமைச்சராக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து இரண்டுமுறையாக யாருக்கும் பதவி வழங்க வேண்டாம் என்பது கட்சியின் கொள்கை முடிவு என்றும், ஷைலஜாவுக்கு மட்டும் அதில் இருந்து விதிவிலக்கு வழங்க இயலாது என்றும் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments