வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேரும் உடனடியாக பணியை தொடங்கலாம் - தமிழக அரசு உத்தரவு

0 1971

வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த பின்பே மருத்துவ பணியை தொடர வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ பணியாளர்கள் தேவை கருதி இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments