ஓடும் சரக்கு ரயிலில் ஏற முயன்று இடறி விழுந்த ஆர்பிஎஃப் வீரர்..! வெளியான அதிர்ச்சி CCTV வீடியோ

0 7735
ஓடும் சரக்கு ரயிலில் ஏற முயன்று இடறி விழுந்த ஆர்பிஎஃப் வீரர்..! வெளியான அதிர்ச்சி CCTV வீடியோ

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் சரக்கு ரயிலில் ஏற முயன்று தவறி விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சுதேஷ், பணி முடித்துவிட்டு சென்னை வருவதற்காகக் காத்திருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த சரக்கு ரயிலின் கார்டு இருக்கும் பெட்டியில் ஏற முயன்றார். அப்போது கால் இடறி ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்ட மற்றொரு ஊழியர் சுதேஷைக் காப்பாற்ற முயன்ற போது இருவரும் ரயிலுக்கு அடியில் விழுந்தனர். இதில் சுதேசுக்கு தலையிலும் மற்ற ஊழியருக்கு லேசான காயமும் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments