வானில் நிகழும் மிக அரிதான ரத்த நிலா..! வருகிற 26ந்தேதி மக்கள் கண்டுகளிக்கலாம்

0 3371

வானில் நிகழும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26ம் தேதி காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் அன்றைய தினம் மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளதாக கோளரங்க இயக்குநர் தெரிவித்தார். இந்த முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும் என்றார் அவர்.

கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும் என்று கூறிய கோளரங்க இயக்குநர், பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக அவ்வாறு காணப்படுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments