ஜூன் 15 ம் தேதிக்குள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் :மத்திய அரசு தகவல்

0 1372
ஜூன் 15 ம் தேதிக்குள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு 5.86 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் :மத்திய அரசு தகவல்

மாநில அரசுகளுக்கு ஜூன் 15ம் தேதிக்குள் 5 கோடியே 86 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர மாநில அரசுகள் தேவைக்கு ஏற்ப நேரடியாகவும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் தடுப்பூசித் தட்டுப்பாடு நீங்கி தடுப்பூசி இயக்கம் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments