அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை

0 859
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை

த்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், அத்தியாவசிப் பொருட்கள் பதுக்கலைக் கட்டுப்படுத்த அதற்கான சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு அவர் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டார்.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை உறுதி செய்யுமாறும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எந்தப் பொருளும் பற்றாக்குறை இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பியூஷ் கோய்ல் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments