கல்யாண ராணியான போலீஸ் சந்தியா ராணி..! அழகா இருந்தா அப்படியே கிட்னாவாம்..!

0 42696
கல்யாண ராணியான போலீஸ் சந்தியா ராணி..! அழகா இருந்தா அப்படியே கிட்னாவாம்..!

தனிமையில் வசிக்கின்ற வசதிபடைத்த இளைஞர்களை காதல்வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொண்டு பணம் பறிப்பதை வாடிக்கையாக்கிய பெண் போலீஸ் ஒருவர், இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு, மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதால் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கல்யாண ராணியாக வலம் வந்த ஏட்டம்மா சந்தியா ராணியின் திருமண மோசடிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஐதராபாத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் தலைமையகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 30 வயதான சந்தியா ராணி, ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்டதாகவும் ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

முதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்ட தாகவும், 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் 3 திருமணங்களை மறைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

சந்தியா ராணியின் காதல் லீலைகள் குறித்து அறிந்ததால் சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். அதற்கு தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என்று சந்தியா ராணி மிரட்டியுள்ளார்.

சரண் தேஜ் மிரட்டலுக்கு பணிய மறுத்த நிலையில் தனது சாதியை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு எதிரான பி.சி.ஆர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு வழக்கு பதிவுசெய்வேன் என்று மிரட்டியதால் பயந்து போன சரண் தேஜ் , சந்தியா ராணியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாக கூறப்படுகின்றது.

அதன்படி குக்கட்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் வைத்து திட்டமிட்டபடி காதலன் சரண் தேஜை 4 வதாக திருமணம் செய்து கொண்டார் சந்தியா ராணி. திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை அவரது வேலைக்கு செல்லவிடாமல் தடுத்ததோடு, தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனை ஏற்க மறுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூட்டி வைத்து தனது போலீஸ் அடியை காட்டியுள்ளார் சந்தியாராணி. சந்தியாராணி முதுகு பழுக்க கொடுத்த அடியால் வலிதாங்க இயலாத சரண் தேஜ், ஐதராபாத் காவல் ஆணையருக்கும்,செம்ஷாபாத் காவல் நிலைய வாட்ச் அப் புகார் எண்ணிற்கும் தனது நிலையை விரிவாக விளக்கி தன்னை காப்பாற்றுமாறு புகார் அனுப்பியுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் சந்தியாராணி ஏற்கனவே பலரை ஏமாற்றி திருமணம் செய்த வழக்குகள் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் சந்தியாராணியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் , வேறு நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் அளிக்கலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆணோ, பெண்ணோ, அவர்களின் குடும்ப விவரங்களை அறிந்து கொள்ளாமல் அழகையும், மயக்கும் பேச்சையும் நம்பி காதல் வலையில் விழுந்தால் வாழ்க்கையில் இது மாதிரி பல அடிகள் விழத்தான் செய்யும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments