கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவி ஏற்பு..!

0 1650
கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவி ஏற்பு..!

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் 2-ஆவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் 3 பெண்கள் உள்பட 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாலை மூன்றரை மணி அளவில் நடைபெறவுள்ளது. விழாவில் 500பேர் மட்டுமே கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விழாவில் பங்கேற்போர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments