கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் கோவை பயணம்..!

0 1833
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் கோவை பயணம்..! சேலம், திருப்பூர் மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை

மிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும்பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இருப்பினும் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தாமதமானது இந்நிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைக்கிறார்

இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்வதுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். பின்னர் நண்பகலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஜவுளி பூங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அங்கிருந்து கார் மூலம் கோவை கொடிசியா சென்று, அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அங்கிருந்து குமரகுரு கல்லூரி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். கோவை விமான நிலையம் சென்று இரவு 8 மணிக்கு மதுரை செல்லும் முதல்வர், இரவு மதுரையில் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

2வது நாளாக நாளை காலை மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காலை 11 மணிக்கு தோப்பூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

கார் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், நாளை மாலை 5.10 மணிக்கு திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். என்ஐடி கல்லூரியில் ஆய்வு நடத்துகிறார். நாளை மாலை 6.15 மணிக்கு பத்திரிகையாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இதையடுத்து இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments