முக கவசம் அணியாத பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீசார்.. மகள் கண்முன்னே அதிர்ச்சி

0 7666

மத்திய பிரதேச மாநிலத்தில் முக கவசம் அணியாத பெண்ணை அவரது மகள் கண்முன்னே போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி, போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாகர் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தனது மகளுடன் தாய் ஒருவர் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது முக கவசம் அணியாமல் சென்றதை கண்ட போலீசார் அவரை மூர்க்கத்தனமாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு பெண் பிடிவாதமாக மறுத்ததால், அவரது தலை முடியை பெண் காவலர் ஒருவர் பிடித்து சாலையில் தர தர வென இழுத்து செல்வதும், அப்போது பெண் வலியால் கதறும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

सागर में एक महिला की पिटाई का वीडियो वायरल हो रहा है, महिला अपनी बेटी के साथ बाहर निकली थी, मास्क नहीं पहना था बेटी ने भी मुंह पर सिर्फ स्कॉर्फ बांध रखा था। इस बीच पुलिस ने चेकिंग के दौरान गांधी चौक के पास उसे पकड़ लिया @ndtvindia @ndtv @manishndtv @alok_pandey @GargiRawat pic.twitter.com/rKwichtrpd

— Anurag Dwary (@Anurag_Dwary) May 19, 2021 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments