தமிழகத்தில் ஒரே நாளில் 34ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா.. 365 பேர் பலி

0 7737

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதே நேரம், கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 23 ஆயிரத்து 863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 20 வயது விருதுநகர் இளைஞர், 25 வயது சென்னை இளம்பெண், 92 வயது கன்னியாகுமரி முதியவர் உள்ளிட்ட 365 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,250 பேரும் செங்கல்பட்டில் 2,275 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் - 1778, திருப்பூர் - 1,573 , திருச்சி - 1,459 , ஈரோடு - 1,362, மதுரை - 1,156 , தூத்துக்குடி - 928 , கன்னியாகுமரி -884, கடலூர் - 848, தஞ்சாவூர் - 813 மற்றும் காஞ்சிபுரத்தில் 811, பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1307 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
மாநிலம் முழுவதும் 2,53,576 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments