மம்தா முன்னிலையிலேயே அதி தீவிர வன்முறை ஏவி விடப்பட்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

0 4858
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் அதி தீவிர வன்முறை ஏவிவிடப்பட்டதாகக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் அதி தீவிர வன்முறை ஏவிவிடப்பட்டதாகக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதில் வன்முறையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ சிபிஐ அலுவலகத்தின் முன் முதலமைச்சர் நின்றுகொண்டிருந்ததாகவும், அவர் முன்னிலையிலேயே வன்முறை ஏவிவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது சுதந்திரமாகவும், அச்சமின்றியும் விசாரணை நடத்துவதில் இருந்து சிபிஐயைத் தடுக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சூழலில் குற்றஞ்சாட்டப்பட்டோரைக் காவலில் எடுப்பது சட்டம் ஒழுங்குச் சிக்கலை உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments