கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் - மத்திய அரசு

0 2238
கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்கள், குணமடைந்த 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என தேசிய நிபுணர் குழு கூறியுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்கள், குணமடைந்த 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என தேசிய நிபுணர் குழு கூறியுள்ளது.

தடுப்பூசியின் முதல் டோசை போட்ட பிறகும் வைரஸ் தொற்று ஏற்பட்டால், மருத்துவ ரீதியாக குணமடைந்தது உறுதி செய்யப்பட்ட பின்னர் 3 மாதங்கள் கழித்தே இரண்டாவது டோஸ் போட வேண்டும்.

மருத்துவமனை அல்லது ஐசியூவில் சேர்க்கப்படும் அளவுக்கு இதர நோய் உள்ளவர்கள் அவற்றில் இருந்து குணமான பின்னர்4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருந்த பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் . தடுப்பூசி போட்டுக் கொண்ட 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள எந்த தடையும் இல்லை.

தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரேபிட் ஆன்டிஜன் சோதனைநடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள சுகாதார அமைச்சகம், அவற்றை மாநில அரசுகளுக்கும், ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments