டவ்-தே புயலால் கடலில் மூழ்கிய ஓஎன்ஜிசி கப்பல்: 22பேர் பலி - 51 பேரை காணவில்லை

0 5578
டவ்-தே புயல் காரணமாக நிலைகுலைந்து கடலில் மூழ்கிய ஓஎன்ஜிசி படகில் இருந்தவர்களில் 22பேர் பலியான நிலையில் 51 பேரை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

டவ்-தே புயல் காரணமாக நிலைகுலைந்து கடலில் மூழ்கிய ஓஎன்ஜிசி படகில் இருந்தவர்களில் 22பேர் பலியான நிலையில் 51 பேரை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மும்பைக்கு அருகே எண்ணெய் அகழ்வு நடக்கும் இடத்தில் இருந்த இந்த கப்பலில் ஓஎன்ஜிசி பணியாளர்கள் 261 பேர் இருந்தனர். படகு கடலில் மூழ்கிய நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கடற்படை கப்பல்கள் ஈடுபட்டன.

அதில் 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. கடலில் உயிருக்கு போராடிய 188பேரை ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல் பாதுகாப்பாக மீட்டது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தேக், பெட்வா, பியாஸ் ஆகிய கடற்படை கப்பல்களும், P8I விமானமும், சீ கிங் ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments