கர்நாடகாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையிலான நிதியுதவியை அறிவித்தார் எடியூரப்பா

0 1415
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியுள்ளவர்களுக்கு ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியுள்ளவர்களுக்கு ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அதன்படி பூ, காய் மற்றும் பழ விவசாயிகள் என 95 ஆயிரம் பேருக்கு எக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படும். ஆட்டோ, டாக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

முடி திருத்துவோர்,டெய்லர்கள், மெக்கானிக்குகள், செருப்பு தொழிலாளிகள் மற்றும் குப்பை சேகரித்து வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார். தெருவோர வியாபாரிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments