காசாவில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. 5 மாதக் குழந்தை அனாதையான சோகம்..!

0 1993

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் கொல்லப்பட்ட நிலையில், 5 மாத பச்சிளங் குழந்தை மட்டும் அதன் உயிரிழந்த தாயின் கரங்களுக்கு இடையே இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

காசாவில் வசித்து வரும் முகமது அல்-ஹதிதி - மகா அபு ஹட்டாப் தம்பதிக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருந்தன. கடந்த சனிக்கிழமை மகா அபு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரமலான் கொண்டாட்டத்திற்காக உறவினர் சென்றுள்ளார். அப்போது, அங்கு நடந்த இஸ்ரேலின் வான் வழித்தாக்குதலில் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.

தாய் மகா உட்பட 4 பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில், அவரின் 5 மாத குழந்தை மட்டும் கட்டிட இடிபாடுகளில் உயிரிழந்த தாயின் கரங்களில் இருந்து லேசான காயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments