வங்கி முன் நின்றிருந்த வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பாதுகாவலர்கள்

0 5770
பீகாரில் பட்டப்பகலில் வங்கி முன் நின்றிருந்த வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை, பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகாரில் பட்டப்பகலில் வங்கி முன் நின்றிருந்த வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை, பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

முசாஃபர்பூரிலுள்ள சென்ட்ரல் வங்கி முன் 88லட்சம் ரூபாய் பணத்துடன் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பணம் இருக்கும் வாகனத்தை நோக்கி பைக்கில் வந்த 2 பேரில், ஒருவன் பாதுகாவலரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினான். சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

குண்டு அடிபட்ட நிலையில், அந்த மர்ம நபர் பைக்கில் ஏறி தப்பிஓடிவிட்டான். இதனிடையே, துரிதமாக செயல்பட்டு மர்ம நபர்களை விரட்டிய பாதுகாவலர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments