12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வழித் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 7633
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக நடத்தப்படும் அலகு தேர்வு வாட்ஸ் அப்பில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாணவிகளுக்கு தனியாக குழுவும், மாணவர்களுக்கு தனியாக குழுவும் அமைக்கப்படும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். விடைகளை தனி தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, பின் அதை படம் பிடித்து, PDF ஆக மாற்றி அனுப்பி வைக்க வேண்டும். விடைத்தாளில் பெயர் மற்றும் பதிவு எண் கட்டாயம் எழுத வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப்பில் இருந்து எடுத்து திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments