தினக்கூலிகள், இதர தொழிலாளருக்கு ரூ.2000 வழங்க வேண்டும்-முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வேண்டுகோள்

0 4123

முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி-பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டம்-நடைபாதை தொழிலாளர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் ஊரடங்கால் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார், கடந்த ஆண்டு அதிமுக அரசு வழங்கியதை போன்று இப்போது அவர்களுக்கு உதவிடுமாறு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments