வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு..!

0 972
வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகக் கூடும் என்றும், அது மே 27ஆம் நாள் ஒடிசா, மேற்கு வங்கப் பகுதிகளைத் தாக்கக் கூடும் என்றும் புவி அறிவியல் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகக் கூடும் என்றும், அது மே 27ஆம் நாள் ஒடிசா, மேற்கு வங்கப் பகுதிகளைத் தாக்கக் கூடும் என்றும் புவி அறிவியல் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

புவி அறிவியல் துறைச் செயலர் மாதவன் ராஜீவன் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்தார். அதில் மே 23ஆம் நாளில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவித்தார். இது மேலும் வலுப்பெற்றுப் புயலாக மாறி மே 27ஆம் நாளில் ஒடிசா, மேற்கு வங்கப் பகுதிகளைத் தாக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வானிலை அறிகுறிகளில் இது தெரியவந்தாலும், ஓரிரு நாட்களில் இது பற்றித் தெளிவாகக் கூற முடியும் என்றும் மாதவன் ராஜீவன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments