”ஊடக, பத்திரிகையாளர்களுக்கு இ பதிவு தேவையில்லை” -காவல்துறை விளக்கம்

0 1420
”ஊடக, பத்திரிகையாளர்களுக்கு இ பதிவு தேவையில்லை” -காவல்துறை விளக்கம்

மிழக அரசால் அனுமதி வழங்கப்பட்ட மருத்துவர்கள் காவல்துறையினர், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர், அத்தியாவசியப் பணியாளர்கள், மத்திய மாநில அரசு பணியாளர்கள், தலைமைச்செயலக அலுவலர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பணி நிமித்தமாக செல்லும் போது வாகனத் தணிக்கை இடங்களில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு இ பதிவு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை செல்வதற்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோர் அடையாள அட்டை இருந்தும் அனுமதிக்கப்படாததை அடுத்து காவல் ஆணையர் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments