ஊரடங்கை மீறிய 4107 வாகனங்கள் பறிமுதல்; 3015 பேர் மீது வழக்கு

0 2115

சென்னையில் நேற்று மாலை 6 மணி வரை காவல் துறையினர் சாலைகளில் தடுப்புகள் அமைத்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்து 315 வழக்குகள் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ பதிவு செய்யாமல் வந்தவர்களிடமும் தேவையின்றி ஊர் சுற்றியவர்களிடமிருந்தும் மொத்தம் 4 ஆயிரத்து 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3 ஆயிரத்து 44 வழக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனோ தொற்றை தடுக்க ஒத்துழைக்கும்படி காவல்துறையினர் விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments