கூகுள் நிறுவனத்தின் நியூஸ் ஷோகேஸ் செய்திப் பலகை அறிமுகம்..!

0 1690
கூகுள் நிறுவனத்தின் நியூஸ் ஷோகேஸ் செய்திப் பலகை அறிமுகம்..! சிறந்த செய்திகள், கருத்துருக்களை தரும் அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம்

கூகுள் நிறுவனம், இந்தியாவில் கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளப் பிரிவுகளில் நியூஸ் ஷோகேஸ் என்ற செய்திப் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும் அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த நியூஸ் ஷோகேஸ் பகுதியில், ஜெர்மனி, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 700 செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகள் இடம் பெறுகின்றன. இதற்காக, இந்நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது.

நெட்டிசன்கள், இந்த செய்திப் பலகையில், தங்களுக்கு பிடித்த தலைப்பை, கிளிக் செய்து, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று விரிவான செய்தியை படிக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments