இந்தியாவின் மக்கள் தொகை பெரிது, 2-3 மாதங்களில் தடுப்பூசி சாத்தியமில்லை :சீரம் தலைமைச் செயல் அதிகாரி விளக்கம்

0 932

ந்தியாவின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை இரண்டு மூன்று மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை செய்ய முடியாது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களின் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறியுள்ள அடார் பூனாவாலா சீரம் இதுவரை 2 கோடி டோஸ்கள் மருந்துகளை உற்பத்தி செய்திருப்பதாக கூறினார்.

உலகின் மிகப்பெரிய மூன்று மருந்து நிறுவனங்களில் சீரம் நிறுவனமும் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறினார். இந்தப் பேரிடர் காலத்தில் புவியியல் ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எல்லை வகுக்க முடியாதது என்று கூறியுள்ள அடார் பூனாவாலா, உலகில் அனைவரும் தடுப்பூசி போட்டு பாதுகாப்பான நிலையை அடையும் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments