அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை

0 14339
அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை

டுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கணிதக் கோட்பாடுகள் மூலம் கணிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழகத்தில் மே 29ந் தேதியில் இருந்து 31-ஆம் தேதிக்குள்ளும், அஸ்ஸாமில் மே 21-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மே 22-ஆம் தேதிக்குள்ளும், ஹிமாசல பிரதேசத்தில் மே 24-ஆம் தேதிக்குள்ளும், மேகாலயத்தில் மே 31-ஆம் தேதியும், திரிபுராவில் மே 27-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments