உங்கள் தொகுதியில் முதலமைச்சர்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை..!

0 3789
தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்களில் 549 மனுக்களுக்கு உடனடி தீர்வு..! பயனாளிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

"ங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டு, கடந்த 9ந் தேதி 4 லட்சம் மனுக்கள் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட வாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, மனுதாரருக்கு தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தொடர்ந்து தையல் இயந்திரம், வாரிசுச் சான்றிதழ், காதொலிக் கருவி, இலவச வீட்டு மனைப் பட்டா போன்றவையும் வழங்கப்பட்டன. வீடுகட்ட உதவித் தொகை, சொட்டு நீர் பாசன உதவி ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்.

கேட்கும் திறனை இழந்திருந்த நந்தினி என்பவருக்கு காதொலி கருவி பொருத்தப்பட்டதால் முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சாலை மேம்பாடு, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 4 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. மீதமிருக்கும் மனுக்களையும் ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments