தமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா.. 364பேர் பலி..!

0 9139
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 364 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 364 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 21,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மதுரையை சேர்ந்த 27 வயது இளைஞர் மற்றும் திருச்சியை சேர்ந்த 28 வயது இளைஞர் உள்ளிட்ட 364 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,071 பேரும் செங்கல்பட்டில் 2,299 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் - 1890, திருச்சி - 1,271 மதுரை - 1,011 ,காஞ்சிபுரத்தில் 761, ஈரோடு - 1,568, கன்னியாகுமரி -863, தூத்துக்குடி - 1,352 , தஞ்சாவூர் - 475 , திருப்பூர் - 1,561 மற்றும் கடலூர் - 591 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் 2,42,929 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments