கட்டுப்பாட்டை இழந்த கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து : கார் ஓட்டி வந்த நபர் தீயில் கருகி பலி

0 1711
கட்டுப்பாட்டை இழந்த கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து : கார் ஓட்டி வந்த நபர் தீயில் கருகி பலி

சென்னை பள்ளிக்கரணையில் அதி வேகமாக வந்த கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தில் கார் ஓட்டி வந்த நபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜிபி சாந்தி நகரில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. அப்போது, காரை ஓட்டிவந்த நபர் உடனடியாக வெளியேறாமல் ரிவேர்ஸ் எடுக்க முயன்றதால், திடீரென தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்த்து.

அதில், காரில் இருந்த நபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவலறிந்த வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments