கொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

0 2645
கொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் வெளியே வந்தால், அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா கேர் சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவர் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.

தொற்றாளர்கள் வெளியில் வருவதாக எழுந்த புகாரை அடுத்து, முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் 2ம் முறை வெளியே வந்தால் கொரோனா கேர் சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு தனிமைபடுத்துதலில் இருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 2,000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வீட்டு தனிமையில் இருந்து வெளியே வந்தால் பொதுமக்கள், 044-25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments