கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை

0 2176
கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டை சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டப்பட்ட சுகாதார அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு, பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படாதது, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஷைலஜா, கொரோனா முதல் அலை மட்டுமின்றி, கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார்.

கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசும் இந்த நெருக்கடியான நேரத்தில், அனுபவம் பெற்ற கேகே ஷைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாததை சமூக தளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.

ஆனால் புதியவர்கள் மட்டுமே அமைச்சர்களாக வேண்டும் என்பது கட்சியின் கொள்கை எனவும் பினராயி விஜயனுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments