ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1685
ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

க்சிஜன், தடுப்பூசிகள், மற்றும் உயிர்க்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் துவங்கவும், மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தியையும் தமிழகத்திலேயே தொடங்கவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட மருத்துவ அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து டிட்கோ நிறுவனம் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்ப கருத்துகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பக் கோரியுள்ளது. அதன் அடிப்படையில் உற்பத்தி தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments