பெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..!

0 1221
பெட்ரோல் - டீசல் விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உயர்வு..!

ண்ணைய் நிறுவனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளன. 

நேற்று முன்தினம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல்-டீசல் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 54 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசலை பொறுத்தவரை, ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 27 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 88 ரூபாய் 34 காசுகளாக உள்ளது.

இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் விலையை உயர்த்துவதால், அன்றாடம் விலை உயரவில்லை என்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments