வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு

0 1380
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 22 ஆம் தேதி வரை,வடக்கு உள்மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையையில்அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments