புதிய அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 3097
புதிய அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுமார் 2கோடியே 7லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் முதல் தவணையான 2ஆயிரம் ரூபாய் இம்மாதத்தில் இருந்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2 லட்சத்து14ஆயிரத்து950 புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத்தின் முதல் தவணையாக 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்காக 42 கோடியே 99லட்சம் செலவிடப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments