ஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு

0 1354
ஐ.எம்.ஏ. முன்னாள்தலைவர் கேகே அகர்வால் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் அதனுடன் போராடி வந்த இந்திய மருத்துவர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால், சிகிச்சை பலனின்றி காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சிலநாட்களாக அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டாக்டர் கேகே அகர்வாலுக்கு வயது 63.

இந்த கொரோனா காலத்தில் அது குறித்தும், கறுப்பு பூஞ்சை நோய் குறித்தும் நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு வீடியோக்களை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments