முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0 1458
முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இரங்கலை பதிவு செய்துள்ள அவர், கி,ரா.வின் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி என குறிப்பிட்டுள்ளார்.

தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்.

இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும் என ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments