திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கண்டுபிடிப்பு..!

0 87327

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாசச்சாரி என்பவர் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி சேஷாசலம் நகரில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு சீனிவாசச்சாரி இறந்ததால் அந்த வீட்டை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வந்து அவற்றை எண்ணிய போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments