ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள்..!

0 5186

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அனைத்து பக்தர்களும் விஐபி பக்தர்களை போன்று அரை மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜரகண்டி... ஜரகண்டி எனும் பேச்சுக்கே இடம் இல்லாமல் நிதானமாக செல்லுங்கள், தள்ளுமுள்ளு வேண்டாம், இடைவெளி விட்டு செல்லுங்கள் என ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இலவச தரிசன முறையை முழுமையாக தேவஸ்தானம் ரத்து செய்துள்ள நிலையில், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே தற்போது சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments