தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து நேரடி விநியோகம்..! தேவைக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்

0 3492

மிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஆறு நகரங்களில் அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு வந்தது.

சென்னையில் இதனை வாங்க நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருந்து விற்பனை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதே போல் ஏனைய ஊர்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதையடுத்து கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப ரெம்டெசிவர் மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசு சார்பில் விற்பனை நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த மருந்து தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments