ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட்

0 8255
ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட்

ந்திரப்பிரதேசத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து, ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புரிந்து கொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஜெகன்மோகன் உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments