நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி ? குட்டி யூடியூப்பருக்கு பூட்டு..! நல்லா கத்துகிறாய்ங்கப்பா சைன்ஸ..!

0 5474
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி ? குட்டி யூடியூப்பருக்கு பூட்டு..! நல்லா கத்துகிறாய்ங்கப்பா சைன்ஸ..!

ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கி இருந்த நேரத்தில் யுடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை வெடிக்கச்செய்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் யூடியுப்பை பார்த்து போண்டா போடுவது எப்படி என்று  நம்ம ஊரு இல்லத்தரசிகள் ரெசிப்பி தயாரித்துக் கொண்டிருக்க , கும்பகோணத்தை சேர்ந்த சுட்டிச்சிறுவன் ஒருவன், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று யூடியூப்பில் சைண்டிஸ்ட் போல தேடி உள்ளான்.

அவனது தேடலுக்கு கைமேல் பலன் கிடைக்க சில பல பொருட்களை கொண்டு பக்காவாக தயாரானது அந்த நாட்டு வெடி குண்டு, அந்த நாட்டு வெடிகுண்டை சக சிறுவர்கள் முன்னிலையில் கெத்தாக வெடிக்க செய்ததோடு அதனை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளது அந்த வாலு..!

அடுத்த சில மணி நேரங்களுக்கெல்லாம் பல்வேறு வாட்ஸ் அப் குழுவில் சிறுவர் தயாரித்த நாட்டு வெடிகுண்டு ரெசிபி தீயாக பரவ, இந்த விபரீத சேட்டையின் பின்னணி குறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

நாட்டு வெடிகுண்டு தயாரிப்பை வீடியோ பதிவு செய்து பரப்பிய 17 வயது சிறுவன் சிக்கினான் அவனை பிடித்து விசாரித்த போது சிறுவர் சீர்த்திருந்த பள்ளியில் இருந்து வெளியில் வந்த தனது நண்பனுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டை தயாரித்து வெடிக்க செய்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தான் .

அந்த பாம்ப் சைண்டிஸ்ட் சிறுவனை பிடித்து விசாரித்த போது சிறுவர் சீர்திருந்த பள்ளியில் தன்னுடன் இருந்த பீகாரை சேர்ந்த சிறுவன் ஒருவன் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முறை குறித்து விளக்கியதாகவும், யூடியூப்பை பார்த்தால் இன்னும் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்ளலாம் என்று கூறியதையடுத்து இரு வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக ஒப்புக் கொண்டான்.

அந்த சிறுவன் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியதோடு, ஏற்கனவே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது குறித்து பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களையும் உடனடியாக நீக்கும்மாறு யூடியூப்பிற்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் விடுமுறை என்பதால், நம்ம ஊரு வாண்டுகள் பேப்பரில் போட் செய்யவா, பிளாஸ்டிக்கில் பூக்கள் செய்யவா என்று யூடியூப்பை பார்த்து கற்றுக் கொண்டு வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், குற்றவழக்கில் சிக்கி சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு சென்று வந்த சில மாதங்களிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு பயிற்சி அளித்து, சிறுவர் சீர் திருத்த பள்ளிகள் சீர்கெட்டு போய் இருப்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

மொத்தத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய சிறுவர்களுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ , சீர்கெட்டு கிடக்கும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளுக்கு இங்கே சீர் திருத்தம் நிச்சயம் தேவைப்படுகின்றது என்பதே கசப்பான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments