தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று

0 4752
தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று

மிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3வது நாளாக 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 335 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 20,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 வயது தேனி சிறுவன், 25 வயது சென்னை இளைஞர், 91 வயது திருச்சி முதியவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 335 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக 6,150பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3264 பேரும் செங்கல்பட்டில் 2154 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் - 1829,, திருச்சி - 1544. மதுரை - 1288 ,காஞ்சிபுரத்தில் 1241.ஈரோடு - 1093, கன்னியாகுமரி -1069,தூத்துக்குடி - 1024 , தஞ்சாவூர் - 1019 , திருப்பூர் - 880 மற்றும் கடலூர் - 765 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் -சிறுமிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 327 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மாநிலம் முழுவதும் 2,31, 596 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments